முசுமுசுக்கை

முசுமுசுக்கை

சைனஸ் - ஆஸ்துமா...
குணப்படுத்தும் முசுமுசுக்கை! மருத்துவம்

முசுமுசுக்கை, கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. மூச்சுக் குழல், நுரையீரல் மற்றும் அதை ஒட்டி உள்ள எல்லாப் பகுதிகளிலும் வரக்கூடிய அலர்ஜி, ரத்தம் கொட்டுதல், புண் என அனைத்தையும் சரிசெய்யும்.

கபத்தை அகற்றி சுத்தம் செய்வதோடு சளி, இருமல், வறட்டு இருமல், இழுப்பு வலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

மேலும் நீண்டநாட்களாக நோயால் பாதிக்கப்பட்டு தளர்ந்துபோனவர்களுக்கு பலத்தை தரவல்லது.

முசுமுசுக்கையை புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உளுந்து, தேங்காய் சேர்த்து துவையல் செய்து சாப்பிடலாம். நெய்யில் வதக்கி குழம்பில் சேர்த்தும் சாப்பிட லாம். தோசைக்கு ஊறவைக்கும் அரிசியுடன் முசுமுசுக்கை இலையை ஊறவைத்து அரைத்தோ, தனியாக முசுமுசுக்கை இலையை அரைத்து தோசை மாவுடன் கலந்தோ தோசை சுட்டு சாப்பிடலாம்.

இப்படி சாப்பிடுவதால் ஆஸ்துமாவில் இருந்து விடுதலை பெறலாம்.

முசுமுசுக்கை இலை சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் சைனஸ் பிரச்னை சரியாகும்.

முசுமுசுக்கை இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி சாப்பிட்டு வந்தால்... எலும்புருக்கி நோய், காசநோய் போன்றவற்றை குணமாக்கும். முக்கியமாக நுரையீரல் புற்றுநோயை சரிபண்ணும்

Comments