புலவர்.இராம. வேதநாயகத்தின் கவி: தமிழை மறவேனே!

புலவர்.இராம.
வேதநாயகத்தின்
கவி:
-------------------------------
தமிழை
    மறவேனே!
------------------------------
கண்கள்
  இமைத்தல்
மறந்தாலும
   கால்கள்
நடத்தல்
    மறந்தாலும்
பண்ணே
    இசைக்க
மறந்தாலும்
    பசியே
வாட்டி
     வதைத்தாலும்
விண்ணே
     பொழிய
மறந்தாலும்
    விளைச்சல்
குறைந்து
    போனாலும்
என்னே
    அல்லல்
வந்தாலும்
    இனிய
தமிழை
    மறவேனே!

செல்வம்
     குவிந்தே
வந்தாலும்
     சீர்மை
செழித்தே
     நின்றாலும்
கல்வி
    அதிகம்
கற்றாலும்
    கடமை
அதிகம்
     புரிந்தாலும்
உள்ளம்
     கொதித்தே
நின்றாலும்
     ஊரே
எதிர்த்து
     நின்றாலும்
கள்ளம்
     கபடம்
இல்லாத
     கனிவுத்
தமிழை
      மறவேனே!

இடியே
       தலையில்
விழுந்தாலும்
      இன்பம்
மிகுந்தே
      போனாலும்
கடையேன்
     நாயேன்
ஆனாலும்
      கனிவு
மிகுதி
      ஆனாலும்
குடியே
      மூழ்கிப்
போனாலும்
      கொஞ்சி
மகிழ்தல்
     மறந்தாலும்
அடியேன்
      எந்த
நாளும்தான்
     அன்னைத்
தமிழை
     மறவேனே!

Comments