சமூக வலைதளத்தில் தீயாக பரவிய இளம் ஐஏஎஸ் அதிகாரியின் போட்டோ:

சமூக வலைதளத்தில் தீயாக பரவிய இளம் ஐஏஎஸ் அதிகாரியின் போட்டோ: ஏன் தெரியுமா? -
📚📕📖விமர்சனம்
ஜக்தீஷ் ஷூக்காலை கட்டிலில் வைத்திருப்பதை பார்த்த பலரும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்நிலையில் நான் வேண்டும் என்றே செய்யவில்லை, காலை கட்டிலில் வைப்பதை தவிர்க்க முடியவில்லை என ஜக்தீஷ் தெரிவித்துள்ளார்.
ராய்பூர்: சத்தீஸ்கரில் இளம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் குழந்தையின் கட்டில் மீது ஒரு காலை தூக்கி வைத்து நின்றபோது எடுக்கப்பட்ட
புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ரமனுஜ்கஞ்ச்சில் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருபவர் ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் ஜக்தீஷ் சோன்கர். அவர் ஊட்டச்சத்து குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை பார்க்க சென்றார்.
மருத்துவமனையில் அவர் ஒரு குழந்தையின் கட்டில் மீது ஒரு காலை தூக்கி வைத்து அதன் தாயுடன் பேசுகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.😁😁😁

Comments