TODAY'S NEWS... 11:05:2016

TODAY'S NEWS...
11:05:2016
🎽💐🎽💐🎽💐🎽

💠💐மே 11 தேசீய தொழில் நுட்ப தினம் - இந்தியா

💠💐11:05:1949 - சியாம் நாடு தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் பெற்றது.

💠💐11:05:1949 - ஐக்கிய நாடுகள் அவையில்இசுரேல் இணைந்தது

💠💐11:05:1998 - இந்தியா பொக்ரானில் மூன்றுஅணுச் சோதனைகளை நடத்தியது.

🎽🎀வாக்குச்சாவடிகள் உள்ள பள்ளிகள் 12-5-2016 அன்று திறந்து வைத்து மாதிரி வாக்குப் பதிவு நடத்த இயக்குநர் தொடக்கக் கல்வி உத்தரவு.

🎽🎀நாட்டில் போலியாக 22 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக ராஜ்யசபையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

🎽🎀தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். 

🎽🎀சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லியைச் சேர்ந்த டினா டாபி முதலிடம்-தமிழகத்தில் சரண்யா ஹரி முதலிடம்

🎽🎀EMIS பணியை மே 12க்குள் முடிக்காவிட்டால் கல்வித்துறை மிரட்டலால் ஆசிரியர்கள் தவிப்பு

🎽🎀அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை

🎽🎀கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவுற்ற பிரிவினருக்கு பள்ளிகளில் 25 சதவீதம் இடம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

🎽🎀மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசுகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

🎽🎀தமிழ் உட்பட 7 பிராந்திய மொழிகளில், அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

🎽🎀சேலம் மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் 9ம் வகுப்புகளில், 5 சதவீதம் வரை, மாணவர்களை, 'பெயில்' செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

🎽🎀ஏஐசிடிஇ அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத தனியார் சுயநிதிபாலிடெக்னிக் கல்லூரிகள் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

🎽🎀சேலம் பெரியார் தொலைதூர கல்வி இயக்ககத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவர்களை சேர்க்க தடையில்லை

🎽🎀145 ஆண்டு கால பழமையான ஓய்வூதிய சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யாது என்று தெரிகிறது. அச்சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி பிரதமர் மோடி இறுதி முடிவு எடுப்பார்.

🎽🎀தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு மத்திய அரசு குறைந்த விலையிலான வீடுகளை கட்டிக் கொடுக்க பரீசீலித்து வருவதாக கூறியுள் ளது. 

🎽🎀அடிப்படைக் கல்வியில் ஆங்கில மாயை தேவையில்லை- மயில்சாமி அண்ணாதுரை கருத்து

🎽🎀ஷில்லாங்கில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

🎽🎀ஜார்கண்டில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான யுரேனிய கழகத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

🎽🎀பொதுத் தேர்தல் 2016 - வாக்குப்பதிவு முடிந்த பின்னர் சில வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் CLOSE பொத்தனை அழுத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மூடுவதில்லை எனவும், இந்த நடவடிக்கையால் முறைகேடு நிகழ்ந்துள்ளது என ஐயம் எழுவதாக வந்த புகாரையடுத்து தேர்தல் நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

🎽🎀தமிழகம் முழுவதும்,
14ம் தேதியுடன் பிரசாரம் ஓய்வு !

Comments