நீங்கள் சிரித்து ரசித்தால் நான் பொறுப்பல்ல
> *1)* “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
> “படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....
> 2)* ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க
> முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
> மாணவர்கள்: புரியல சார்...
>
> *3)* போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
> டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
> *
> 4)* மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு
> இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
> அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா
> *
> 5)* மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
> மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
> கணவன்: அது ஒரு இறந்த காலம்....
> *
> 11)* தேர்வு அறையில்...
> மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
> மாணவி: ஆல் தி பெஸ்ட்!
> மாணவன் பெயில்.... மாணவி 80%
> *நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....*
> (ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)
> *
> 12)* நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
> பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
> நாட்டாமை: என்ர தம்பி*/ சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா/*..
> *
> 13)* முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
> முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
> இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?
> *
> 14)* லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
> லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
> எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்...* எப்பூடி**?*
>
> *
> 16)* கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
> மனைவி: பல்லி விழும் பலன்...
> கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
> மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...
> *
> 17)* நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது
> தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று
> படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர்
> படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
> “இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”
> *
> 18)* நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச்
> டயலாக் எப்படி இருக்கும்?
>
> * J to the A to the V to the A --- JAVA
> * கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
> * C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++
👌👌👌👌👌👌👌👌👌
Comments